விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்து வருகிறார்.

சமந்தா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.வேலைக்காரன் படத்தில் நடித்த மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் ரம்யா கிருஷ்ணன்,காயத்ரி,மிர்னாலினி ரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

நேற்று Instagram Live-ல் ரசிகர்களுடன் பேசிய யுவன் ஷங்கர் ராஜா,அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது ஒரு ரசிகர் சூப்பர் டீலக்ஸ் எப்போது வெளியாகும் என கேட்டார்.இதற்கு பதிலளித்த யுவன் கூடிய விரைவில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் ,அதன் பின் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என தெரிவித்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் இந்த படத்தை பற்றிய அப்டேட் வந்துள்ளதால் விஜய்சேதுபதி ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.