சினிமாவில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற கனவோடு வந்து பலரும் தங்கள் திறமைகளை யூடியூப்,இன்ஸ்டாகிராம் போன்ற பல தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.அப்படி திறமையை வெளிப்படுத்தி பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றனர்.

யூடியூப்பில் வெப் சீரிஸ் ஒன்றில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் தீபா பாலு.தொடர்ந்து ஆல்பம் பாடல்கள்,வெப் சீரிஸ் போன்றவற்றில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார் தீபா பாலு.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.பல பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்குகளை தொடங்கி பலரும் சில தேவையற்ற விஷயங்களை பகிர்ந்து வருவார்கள்.அவற்றை அறிந்து பலரும் அவ்வப்போது ரசிகர்களை அலர்ட் செய்வது வழக்கம்.

அப்படி தற்போது தீபா பாலு பெயரில் சில போலி கணக்குகளை ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து ரசிகர்களை அலர்ட் செய்த் தீபா பாலு.அந்த கணக்குகளை பின்தொடர வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்

youtube actress deepa balu alerts fans about twitter instagram fake accounts