கடந்த சில வருடங்களாக சமூகவலைத்தளங்களில் வளர்ச்சி யூடியூப்பில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்த தமிழ் சீரிஸ் ஆஹா கல்யாணம்.இந்த தொடரில் பவி டீச்சர் என்ற பவித்ராவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறியவர் பிரிகிடா சகா.இந்த தொடரை அடுத்து சில பல குறும்படங்களில் நடித்து அசத்தியிருந்தார் பிரிகிடா.

இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகளும் வரத்தொடங்கின.வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் பிரிகிடா.அடுத்ததாக விஷால் நடித்த அயோக்யா,தளபதி விஜயின் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.

விரைவில் வெளியாகவுள்ள வேலன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் பிரிகிடா.இதனை அடுத்து சில படங்களில் நடித்து வருகிறார் பிரிகிடா.இவர் எப்போது ஹீரோயினாக நடிக்கப்போகிறார் என்று இவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

தற்போது இவர் ஹீரோயினாக நடிக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.தெலுங்கில் Shyam Tummalapalli இயக்கத்தில் Dharma Mahesh ஹீரோவாக நடிக்கும் படத்தில் பிரிகிடா ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த அறிவிப்பை படத்தின் பூஜை புகைப்படத்துடன் பிரிகிடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.