தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் அருண்பாண்டியன். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்த அருண்பாண்டியன் தயாரிப்பாளராகவும் தனது ஐங்கரன்  இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

நடிகர் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் அவர்களின் மகளான கீர்த்தி பாண்டியன் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் இயக்குனர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் உருவான தும்பா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தும்பா திரைப்படத்தில் நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த விஜய் டிவி புகழ் தீனா நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக பிரபல தமிழ் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவான அன்பிற்கினியாள் திரைப்படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் வெளியாகி தேசிய விருது பெற்ற ஹெலன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக தயாரான அன்பிற்கினியாள் திரைப்படத்தில் நடிகர் அருண்பாண்டியன் உடன் இணைந்து கீர்த்தி பாண்டியன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி பாண்டியன் புல்லட் ஓட்டும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பைக் ரைடிங்-இல் மிகுந்த ஆர்வம் உள்ள நடிகை கீர்த்தி பாண்டியன் தன்னுடைய புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட்டில் ரைடு போகும் புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthi Pandian (@keerthipandian)