தமிழ் திரையில் சிறந்த காமெடியன்களில் ஒருவர் நடிகர் யோகிபாபு. இவர் நடித்த 50 /50 திரைப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதிலும் குறிப்பாக யோகிபாபு பாடும் கோலமாவு கோகிலா என்ற பாடலை சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார் பாடியுள்ளார். படமும் அதே போன்று சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் தெரிவித்துள்ளார். இந்த படம் நாளை வெளியாகவுள்ளது. லிபி சினி கிராப்ட்ஸ் நிறுவனம் சார்பில் வி.என்.ஆர்  தயாரித்தது. 

balasaravanan jhonvijay

அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருப்பதாகவும், நகைச்சுவை மட்டும் இல்லாமல் அதிரடியிலும் அல்டிமேட் காட்டியுள்ளார் யோகிபாபு. இந்த படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்றே கூறலாம். 

jhonvijay yogibabu

நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன், தீனா, நந்தா சரவணன், மயில்சாமி, சாமிநாதன், மதன் பாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு அலெக்சாண்டர் கதை எழுத, பிரதாப் ஒளிப்பதிவு மேற்கொள்ள தரண் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் புதிய ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.