தமிழ் திரையுலகில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. இவரது பெயர் பலகை இல்லாமல் திரைப்படங்கள் வெளியாவதே இல்லை என்றும் கூறலாம். இந்த வருடமும் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து தர்பாரில் கலக்கினார். இவர் ஹீரோவாக நடித்த காக்டெய்ல் மற்றும் மண்டேலா போன்ற படங்கள் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது. 

Yogibabu

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் குறித்த அச்சம் அதிகளவில் உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு ஊர்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரையும் அவசியமில்லாமல் வெளியில் வர வேண்டாம் என போலீஸார் கேட்டுக்கொண்டனர். 

Yogibabu

இப்படியிருக்கையில் நடிகர் யோகிபாபு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இனி கொரோனாவால் ஒரு உயிரும் போகாமல் இருக்க, நாம் அனைவரும் ஊரடங்கு உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தான் வணங்கும் இறைவன் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.