தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், எதார்த்த ஹீரோக்களில் ஒருவராகவும் திகழ்பவர் நடிகர் யோகி பாபு. இவரது பெயர் இல்லாமல் திரைப்படங்கள் வெளியாவதே இல்லை என்றும் கூறலாம். சின்னத்திரை மூலம் அறிமுகமான இவர், தனது அயராத உழைப்பினால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபலமாக மாறியுள்ளார். 

Yogibabu Childhood Photo Goes Viral

தினமும் படப்பிடிப்பு என பிஸியாக இருந்த யோகிபாபு, இந்த ஊரடங்கில் வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகிறார். லாக்டவுனில் சோஷியல் மீடியாவிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பள்ளியில் படிக்கும் போது மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. 

Yogibabu Childhood Photo Goes Viral

யோகிபாபு கைவசம் வலிமை, அயலான், டாக்டர், கடைசி விவாசாயி, கர்ணன் மற்றும் ட்ரிப் போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. காக்டெயில் மற்றும் மண்டேலா படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார் யோகிபாபு.