தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், எதார்த்த ஹீரோக்களில் ஒருவராகவும் திகழ்பவர் நடிகர் யோகி பாபு. இவரது பெயர் இல்லாமல் திரைப்படங்கள் வெளியாவதே இல்லை என்றும் கூறலாம். சின்னத்திரை மூலம் அறிமுகமான இவர், தனது அயராத உழைப்பினால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபலமாக மாறியுள்ளார். 

தினமும் படப்பிடிப்பு என பிஸியாக இருந்த யோகிபாபு, இந்த ஊரடங்கில் வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகிறார். லாக்டவுனில் சோஷியல் மீடியாவிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் பள்ளியில் படிக்கும் போது மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டர் பகிர்ந்தார். 

தற்போது ஜெயில் படத்தின் காத்தோடு காத்தானேன் பாடலுக்கு பாடுவது போல் வாயசைத்துள்ளார். ஜிவி பிரகாஷ் பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தை தெறிக்க விடுகிறது. தனுஷ் மற்றும் அதிதி ராவ் பாடிய இந்த பாடல் வரிகளை கபிலன் எழுதியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த பாடல் அமோக வரவேற்பை பெற்றது. இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து, இசையமைத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ஜெயில். ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக அபர்நிதி நடித்துள்ளார். ராதிகா, ரோபோ ஷங்கர், யோகிபாபு போன்றோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

யோகிபாபு கைவசம் வலிமை, அயலான், டாக்டர், கடைசி விவாசாயி, கர்ணன் மற்றும் ட்ரிப் போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. காக்டெயில் மற்றும் மண்டேலா படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார் யோகிபாபு. இதில் காக்டெயில் திரைப்படம் நேரடியாக ஓடிடி-ல் வெளியாகவுள்ளது. சிறந்த காமெடியனாக இருக்கும் யோகிபாபு, சீரான ஹீரோவாகவும் அசத்தி வருகிறார். 

@gvprakashoffl

My bro version ##kaathodukaathanen ##gvprakash ##yogibabu song from ##jail @sonymusic_south

♬ Kaathodu Kaathanen (From "Jail") - G.V. Prakash Kumar & Dhanush & Aditi Rao Hydari