தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நகைச்சுவைத் திரைப்படமாக 1970களில் வெளியாகி மெகா ஹிட்டான காசேதான் கடவுளடா நகைச்சுவை திரைப்படம் தற்போது ரீமேக் ஆகிறது .இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் தயாராகும் காசேதான் கடவுளடா ரீமேக் திரைப்படத்தை தயாரிப்பாளர் M.K.ராம் பிரசாத் அவர்களின் MKRP புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குனர் R.கண்ணனின் மசாலா பிக்ஸ்  இணைந்து தயாரித்துள்ளது.

காசேதான் கடவுளடா ரீமேக்கில் நடிகர் சிவா மற்றும் நடிகர் யோகிபாபு முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகைகள் ஊர்வசி , ப்ரியா ஆனந்த் ,கருணாகரன், தலைவாசல் விஜய் ஆகியோருடன் இணைந்து விஜய் டிவியின் குக்கு வித்து கோமாளி புகழ் & சிவாங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்ய N.கண்ணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் காசேதான் கடவுளடா படப்பிடிப்பு தற்ப்போது நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி தொடங்கப்பட்ட காசேதான் கடவுளடா படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. சரியாக திட்டமிட்டபடி படப்பிடிப்பு நகர்ந்ததால் கிட்டத்தட்ட 40 நாட்களுக்குள் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

ஒரே கட்டமாக காசேதான் கடவுளடா ரீமேக் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் முதல் 50 சதவிகித இருக்கைகளோடு திரையரங்குகள் திறக்க அனுமதி கிடைத்துள்ளதால் விரைவில் காசேதான் கடவுளடா ரீமேக் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.