திரையுலகில் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நகைச்சுவை நடிகராக திகழ்பவர் யோகி பாபு. இவரது பெயர் இல்லாமல் திரைப்படங்கள் வெளியாவதே இல்லை என்றும் கூறலாம். சின்னத்திரை மூலம் அறிமுகமான இவர், தனது அயராத உழைப்பினால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபலமாக மாறியுள்ளார். தொடர்ச்சியான படங்கள் கமிட்டாகி பிஸியாக இருக்கும் திரைப்பிரபலங்களில் இவரும் ஒருவர். 

இந்நிலையில் யோகிபாபு பகிர்ந்த கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பந்துகளை சிக்ஸர், ஃபோர் என விளாசி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் யோகிபாபு. ஐ.பி.எல் சீசன் வருவதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த வீடியோ விருந்தளிக்கும் வகையில் இருந்தது. யோகிபாபு பள்ளி, கல்லூரி காலத்தில் கிரிக்கெட் மற்றும் ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளில் சிறந்த விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பா. ரஞ்சித் தயாரிக்கும் பொம்மை நாயகி படத்தில் நடித்து வருகிறார் யோகிபாபு. யோகிபாபு நடிப்பில் ட்ரிப் திரைப்படம் கடைசியாக வெளியானது. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கிய இந்த படத்தில் சுனைனா, கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர்.த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமாக அமைந்ததது. 

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் பேய் மாமா. இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ரிலீஸ் தகவல் இன்னும் தெரியவில்லை. இது தவிர்த்து ஜெகஜாலக்கில்லாடி, பிஸ்தா, சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை2, பன்னிக்குட்டி, மண்டேலா, வெள்ளை யானை, கடைசி விவசாயி ஆகிய திரைப்படங்கள் யோகிபாபு கைவசம் உள்ளது. 

தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடித்துள்ளார் யோகிபாபு. இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.