தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் யோகிபாபு அடுத்ததாக தளபதி விஜயின் வாரிசு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெய்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் விரைவில் வெளிவரவுள்ள தனுஷின் நானே வருவேன், சிவகார்த்திகேயனின் அயலான், சுந்தர்.சி-யின் காஃபி வித் காதல் & தலைநகரம் 2, பிரசாந்தின் அந்தகன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

காமெடியனாக மட்டுமல்லாமல் நகைச்சுவையை முன்னிறுத்தும் கலகலப்பான காமெடி திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் யோகி பாபு நடிப்பில் பூச்சாண்டி, சலூன், காசேதான் கடவுளடா, மெடிக்கல் மிராக்கிள் மற்றும் பூமர் அங்கிள் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. தொடர்ந்து காமெடியனாக இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட சீரியசான கதாபாத்திரத்தில் பொம்மை நாயகி படத்திலும் கதாநாயகனாக யோகிபாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் யோகி பாபு நடிப்பில் ஃபேன்டசி என்டர்டெயனர் படமாக தயாராகியுள்ள திரைப்படம் யானை முகத்தான். பிரபல மலையாள இயக்குனர் ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில் யோகிபாபு உடன் இணைந்து ஊர்வசி, ரமேஷ் திலக், கருணாகரன், ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் யானை முகத்தான் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

யானை முகத்தான் திரைப்படத்தை தி கிரேட் இந்தியன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க, இன்ஃபோகஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் Front Row புரோடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. கார்த்திக் S நாயர் ஒளிப்பதிவில், சையலோ சத்யன் படத்தொகுப்பு செய்யும் யானை முகத்தான் படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் யோகிபாபுவின் யானை முகத்தான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Happy to share #YaanaiMugathaan First Look. Congrats @thilak_ramesh & team.

Directed by #RejishhMidhila

@iYogiBabu @RMidhila #Karunakaran #Oorvashi @lijojamespj #bharathshankar #KarthikSnair #Syalo #Thegreatindiancinemas #YM pic.twitter.com/VaX78CxhEe

— VijaySethupathi (@VijaySethuOffl) September 1, 2022