தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நகைச்சுவை நடிகராக திகழும் நடிகர் யோகிபாபு அடுத்ததாக தளபதி விஜய் நடிப்பில் வாரிசு, இயக்குனர் சுந்தர்.சியின் காஃபி வித் காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் விரைவில் வெளிவரவுள்ள தனுஷின் நானே வருவேன், சிவகார்த்திகேயனின் அயலான், பிரசாந்தின் அந்தகன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.

நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல் நல்ல நடிகராகவும் முன்னணி வேடங்களில் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வரும் நடிகர் யோகிபாபு, முன்னதாக நடித்த காசேதான் கடவுளடா, சலூன், பூச்சாண்டி ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், அடுத்ததாக மெடிக்கல் மிராக்கிள், பூமர் அங்கிள் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ள திரைப்படம் பொம்மை நாயகி.யோகி பாபு உடன் இணைந்து சுபத்ரா மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பொம்மை நாயகி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து வழங்கும் பொம்மை நாயகி திரைப்படத்திற்கு அதிசயராஜ் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்ய, சுந்தரமூர்த்தி.K.S இசையமைத்துள்ளார். பொம்மை நாயகி படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பொம்மை நாயகி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Presenting the First Look of #BommaiNayagi starring @iYogiBabu#BommaiNayagiFirstLook #HBDYogiBabu
@officialneelam @YaazhiFilms_ @vigsun @shan_shanrise @athisayam_rajj @SundaramurthyKS @EditorSelva @KaviKabilan2 @TherukuralArivu @_STUNNER_SAM @thehari___ pic.twitter.com/X6NuYiXhfH

— pa.ranjith (@beemji) July 22, 2022