உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.

Yogi Babu Donates Rice Bags TO SIAA Members

கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

Yogi Babu Donates Rice Bags TO SIAA Members

ஷூட்டிங் நடக்காததால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர்களுக்கு உதவும்படி நடிகர் யோகிபாபு 1250 கிலோ அரிசி மூட்டைகளை உதவியாக நடிகர்சங்கத்திற்கு வழங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.யோகிபாபுவின் செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.