தற்போதைய நிலையில் அனைத்து படங்களிலும் இடம்பெற்றிருக்கும் ஒரு நடிகர் என்றால் அது யோகிபாபு தான்.இவர் இல்லாத படங்கள் மிகவும் குறைவு தான்.தனக்கென ஒரு ஸ்டைலையும்,தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருக்கும் இவர் விஸ்வாசம்,பிகில்,தர்பார் என அனைத்து பெரியஹீரோ படங்களிலும் நடித்துவிட்டார்.

மேலும் கூர்கா,தர்மபிரபு,பன்னிகுட்டி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்துவரும் அயலான் மற்றும் டாக்டர் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார்.மஞ்சு பார்கவிக்கும் யோகி பாபுவிற்கும் திருமணம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது.யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் நண்பர்கள்,உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது . திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.

கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அதிகமாக OTT போன்ற ஆன்லைன் தளங்களில் நிறைய நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.திரையரங்குகள் இல்லாததால் சிறிய படங்களை OTTயில் வெளியிட  தமிழ் சினிமாவும் தயாராகி வந்தது.OTT-யில் படங்கள் வெளியிடுவதை திரையரங்க உரிமையாளர்களும்,விநியோகஸ்தர்களும்,திரை பிரபலங்கள் சிலரும் எதிர்த்து வந்தனர்.திரையரங்குகள் இல்லாததால் OTTயில் படங்களை வெளியிட சில தயாரிப்பாளர்கள் ஆதரித்து வந்தனர்.

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள்,கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் உள்ளிட்ட திரைப்படங்கள் OTTயில் வெளியாகின.இதனை தொடர்ந்து தற்போது யோகிபாபு நடிப்பில் தயாராகியுள்ள காக்டெய்ல் திரைப்படம் தற்போது நேரடியாக OTT-யில் வெளியாகவுள்ளது.ஜூலை 10ஆம் தேதி முதல் இந்த படம் ஜீ5-ல் ஒளிபரப்பாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.இந்த படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து விஜய் டிவியில் பிரபலமான புகழ் மற்றும் பாலா இருவரும் நடித்துள்ளனர்.இந்த படத்தின் புதிய ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்