தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கினார். அதிவேகமாக காரில் சென்ற யாஷிகா ஆனந்தின் கார் சாலையின் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான வள்ளிசெட்டி பாவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காரை ஓட்டி வந்த நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரோடு பயணித்த மற்ற நண்பர்களும் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து நடிகை யாஷிகாவுக்கு பல்வேறு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது விபத்தில் இருந்து மீண்டு வந்த நடிகை யாஷிகா ஆனந்த் தனது தோழியின் மரணம் குறித்தும் விபத்து குறித்தும் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், என் வாழ்க்கையில் நீ இல்லாமல் போவதற்கு நானே காரணமாக இருப்பேன் என்று ஒரு நாளும் எண்ணியதில்லை... உன் ஆன்மா சாந்தி அடையட்டும் தேவதையே... என பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது அன்பை தெரிவிக்கிறேன் உண்மையில் நான் வாழ விரும்பவில்லை ஆனால் நீங்கள் அனைவரும் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்திருக்கிறீர்கள் நான் விரைவில் மீண்டு வருவேன் ...எனவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், யாஷிகாவின் தோழியின் மறைவு குறித்தும் அதற்கான காரணமாக தாமே  இருந்ததை நினைத்தும் குற்ற உணர்வோடு இருப்பதாகவும் எனவே வரபோகும் யாஷிகாவின் பிறந்தநாளை அவர் கொண்டாட போவதில்லை என்றும் அவரது ரசிகர்களும் கொண்டாட வேண்டாம் என்றும் மறைந்த தோழி பாவனி மற்றும் அவரது குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்வோம்... என் வாழ்வின் மிகப்பெரிய இழப்பு அவள்... என்னை மன்னித்துவிடு... என மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். நடிகை யாஷிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand)