2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,
ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.இந்த படத்தின் ரிலீஸை ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது,இதற்கு காரணம் கே.ஜி.எப் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பே காரணம்.

இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் முக்கிய வில்லனான ஆதிரா கதாபாத்திரத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை படக்குழுவினர் சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.சமீபத்தில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருபவரும்,பிரபல பாலிவுட் நடிகருமான சஞ்சய் தத் துக்கு லங் கேன்சர் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார் அதில் தன்னுடைய உடல்நிலை காரணமாக சில நாட்கள் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.கேன்சரை குணப்படுத்த அவர் அமெரிக்காவிற்கு செல்லவுள்ளார் என்று தெரியவந்துள்ளது.இவரது காட்சிகள் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் லாக்டவுனுக்கு பிறகு ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்கியுள்ளது இது குறித்து படக்குழுவினர் சிலர் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.இந்த ஷூட்டிங்கில் தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளார் என்ற தகவலும் புகைப்படத்தோடு வெளியாகியுள்ளது.இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விரைவில் முடிந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் யாஷ் இன்று கலந்துகொள்ளுவார் என்ற அறிவிப்பை படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர்.இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு மொத்தமாக முடிக்கப்படும் என்றும் ரிலீஸ் வேலைகள் ஷூட்டிங் முடிந்த பின் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.தற்போது யாஷ் இந்த படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Waves can't be stopped but you can learn to sail.. After a long break.. Rocky sets sail from today.

A post shared by Yash (@thenameisyash) on