ஒட்டுமொத்த இந்திய திரை உலக ரசிகர்களின் கவனத்தையும் கன்னட சினிமாவின் பக்கம் திருப்பிய கேஜிஎஃப் 1 படத்தின் இமாலய வெற்றியை தொடரந்து ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் ரிலீஸாகி தற்போது 25 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக 1,200 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 

இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில், பிரம்மாண்ட படைப்பாக தயாராகி கன்னடம், மலையாளம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தை HOMBALE பிலிம்ஸ் தயாரித்துள்ளது. அதிரடியான ராக்கி கதாபாத்திரத்தில் நடிகர் யஷ் நடிக்க, வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். 

மேலும் ஸ்ரீநிதி செட்டி, பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன், ஈஸ்வரி ராவ், அனன்ட் நாக், மாளவிகா அவினாஷ் ஆகியோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புவன் கௌடா ஒளிப்பதிவில், ரவி பஸ்ருர் இசையமைத்துள்ள, கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தை மொழிகளை கடந்து அனைத்து சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர் 

மாஸான பஞ்ச் வசனங்கள் அதிரடியான ஆக்ஷன் பிரமிக்க வைக்கும் காட்சிகள் என அனைவரையும் கவரந்த கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்திலிருந்து சுல்தானா வீடியோ பாடல் தற்போது வெளியானது. கேஜிஎஃப் 2 படத்தின் அசத்தலான சுல்தானா வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.