ஒட்டு மொத்த இந்திய திரையுலக ரசிகர்கள் அனைவரையும் கன்னட சினிமாவின் பக்கம் திருப்பியது கேஜிஎஃப் சாப்டர் 1 திரைப்படம். இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் முன்னணி கன்னட நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்து பிரம்மாண்டமான அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளிவந்த கேஜிஎஃப் சாப்டர் 1 மெகா ஹிட்டானது.

இதனையடுத்து  உருவான கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி உலகெங்கும்  திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில், புவன் கௌடா ஒளிப்பதிவில், ரவி பஸ்ருர் இசையமைத்துள்ள, கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தை HOMBALE பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

ராக்கி கதாபாத்திரத்தில் அதிரடியில் அசத்தும் நடிகர் யாஷ் உடன் இணைந்து ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடிக்க, கேஜிஎஃப் சாப்டர் 2-வின் மிரட்டலான வில்லனாக சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன், ஈஸ்வரி ராவ், அனன்ட் நாக், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக வெளிவந்த கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் மிரட்டலான ட்ரைலர் இதோ…