கே.ஜி.எப் 2 செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | January 08, 2020 13:21 PM IST
கடந்த வருடம் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க ,ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.
இந்த படம் வரும் ஏப்ரல் 2020-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று படத்தின் நாயகன் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இந்த படத்தின் பிறந்தநாள் சிறப்பு போஸ்டராக செகண்ட் லுக் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.