ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த தொடர் யாரடி நீ மோஹினி.1250 எபிசோடுகளை கடந்த இந்த தொடர் தனியொரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தது.இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தியவர் நக்ஷத்திரா.

வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் இவரது நடிப்பினை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வந்தனர்.இதனை தவிர ஒரு படத்திலும் நடித்து அசத்தியுள்ளார் நக்ஷத்திரா.இவற்றை தவிர செம்பருத்தி,அபி டெய்லர் உள்ளிட்ட தொடர்களில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி அசத்தினார் நக்ஷத்திரா.

இவர் அடுத்து எப்போது சீரியலில் ஹீரோயினாக நடிக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.தற்போது இவர் ஹீரோயினாக நடிக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார் நக்ஷத்திரா.

வள்ளி திருமணம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் அறிவிப்பு ப்ரோமோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.விரைவில் தொடரின் அறிவிப்பு தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவர் மீண்டும் சீரியலில் ஹீரோயினாக நடிப்பதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.