“பொன்னியின் செல்வன்.. வெந்து தணிந்தது காடு.. படங்களுக்கு இதான் நடந்துச்சு..” எழுத்தாளர் ஜெயமோகன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – அட்டகாசமான வீடியோ இதோ..

பொன்னியின் செல்வன் கதாபாத்திரம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் - Writer jayamohan about ponniyin selvan charecters | Galatta

சம கால தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள். தமிழ் இலக்கிய வட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழில் மிக முக்கியமான படங்களாகவும் ரசிகர்களால் கொண்டாடப் பட்டபடங்களாகவும் இருக்கும் பல படங்களில் எழுத்தாளராக பணியாற்றியவர் எழுத்தாளர் ஜெயமோகன். அதன்படி, ‘நான் கடவுள்’, ‘அங்காடித் தெரு’, ‘கடல்’, ‘காவிய தலைவன்’, ‘பாபநாசம்’,’2.0’,’சர்கார்’, ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்கள் முக்கிய படங்களாகும்.  

மேலும் தமிழ் சினிமாவின் மாபெரும் கனவு திரைப்படமான மணிரத்னம்  ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கும் இவர்தான் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரை ரசிகர்களாலும் வாசகர்களாலும் கொண்டாடப்படும் மிக முக்கியமான எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் மீடியா சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பொன்னியின் செல்வன் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுடன் தொடர்பு படத்தியும் வேறுபடுத்தியும் வடிவமைத்தது குறித்து ஜெயமோகன் பகிர்ந்து கொண்டவை,  "கல்கியின் கதாபாத்திரத்திரங்கள் மயக்க நிலையில் இல்லாமல் தெளிவாக இருக்கும். ஆதித்ய கரிகாலன் என்றால் ஆண்மை, கோபம், சீற்றம் என்று மகாபாரதம் கர்ணன் சாயல் இருக்கும்‌.அருள் மொழி என்றால் ஏறத்தாழ கம்பன் இராமாயணத்தில் இராமனை பற்றி என்ன சொல்றாரோ அதே மாதிரி இருக்கும். வந்தியத்தேவன் அர்ஜீனன் அம்சம் கொண்ட கதாபாத்திரத்திரம்.முன்னாடி திட்டமிடும்போது வந்தியதேவனாக விஜய் பன்றதா இருந்தது. விஜய் பண்ண முடியல.. கார்த்தி பண்ண முடியும். அருள் மொழியாக ஜெயம்ரவி னு சொன்னது எல்லோரும் கேட்டாங்க.. அவர் ஒரு நடிகர் அவரால் உருமாற முடியும்." என்றார்.

மேலும், " வெந்து தணிந்தது காடு படத்தில் இயக்குனருக்கு அந்த கதாபாத்திரம் பிடிச்சிருந்தது. அதுக்கு சிலம்பரசன் என்ன வேண்டும்னு கேட்க 18 வயது பையனா வரனும் னு கேட்கும்போது உடனே 15 வயது குறைச்சு சிலம்பரசன் பண்ணாரு.. எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் புகைப்படம் அனுப்புறாரு.. அந்த புகைப்படம் பார்த்து என் எண்ணம் மாற்றிக் கொண்டேன்.  எப்போதும் நடிகர்கள் மாறுவார்கள் அப்படி ஒவ்வொருத்தரும் அந்த மாற்றத்தை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள்.  ஏ ஆர் ரஹ்மான் வந்தபோது அவர் கிராம படத்திற்கு இசையமைக்க முடியுமா? அவர் நகரத்தில் வளர்ந்தவராச்சே.. என்று நிறைய சொன்னார்கள். ஆனால் அவர் பாரதி ராஜா படத்தில் அமைச்ச இசை இன்றைக்கும் அந்த தேனி, கம்பம் உணர்வை கொடுக்கிறது. அது போல போனாதான் அவன் கலைஞன். இதுதான் எனக்கு தெரியும் இதுக்கு மேல பண்ண முடியாதுனா அவன் கலைஞன் இல்லை." என்றார்.

மேலும் எழுத்தாளர் ஜெயமோகன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..

ஹிப் ஹாப் ஆதியின் வீரன்.. First single குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

ஹிப் ஹாப் ஆதியின் வீரன்.. First single குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் அட்டகாசமான Glimpse இதோ..

“அவர் திரையில் அழும் போதெல்லாம் சிரிப்பு வரும்” மறைந்த நடிகர் விவேக் குறித்து ரமேஷ் கண்ணா – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“அவர் திரையில் அழும் போதெல்லாம் சிரிப்பு வரும்” மறைந்த நடிகர் விவேக் குறித்து ரமேஷ் கண்ணா – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

“வசனத்தில் சூரியன் லாம் நம்ம டச் பண்ண வேண்டாம்” ரஜினிகாந்த் குறித்து ரமேஷ் கண்ணா பகிர்ந்த மாஸ் தகவல்.. – முழு நேர்காணல் இதோ..
சினிமா

“வசனத்தில் சூரியன் லாம் நம்ம டச் பண்ண வேண்டாம்” ரஜினிகாந்த் குறித்து ரமேஷ் கண்ணா பகிர்ந்த மாஸ் தகவல்.. – முழு நேர்காணல் இதோ..