“சாதி பேசுகின்ற படங்கள் எல்லாமே தவறான படங்கள் தான்” வேல ராமமூர்த்தி காரசாரமான பதில்.. – வைரலாகும் சிறப்பு நேர்காணல் இதோ..

தமிழ் சினிமாவில் சாதிய ரீதியான திரைப்படங்கள் குறித்து நடிகர் வேல ராமமூர்த்தி விவரம் இதோ - Actor Vela Ramamoorthy about Caste films | Galatta

தமிழ் சினிமாவில் சம காலத்தில் சிறந்த குணசித்திர கதாபாத்திரங்களையும் அல்லது வில்லன் கதாபாத்திரங்களையும் கணகச்சிதமாக செய்யக் கூடிய சிறந்த நடிகர் வேல ராமமூர்த்தி. மதயானை கூட்டம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்ற இவர் தொடர்ந்து பல படங்களில் முன்னணி வில்லனாகவும் சிறந்த குணசித்திர கதாபத்திரங்களையும் கச்சிதமாக நடித்து கொடுப்பவர். அதன்படி அவர் நடித்த கொம்பன், பாயும்புலி, சேதுபதி, கிடாரி போன்ற படங்கள் இவர் நடிப்பை அதிகம் பேசியது. நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த எழுத்தாளராகவும் வேல ராமமூர்த்தி இருந்து வருகிறார். குற்றப் பரம்பரை, அரியநாச்சி, பட்டத்து யானை, குருதி ஆட்டம் ஆகிய புத்தகங்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் படத்தில் இவர் பேசிய ‘இளந்தாரி பய’ வசனம் இன்றைய சமூக வலைத்தளத்தில் மீம்களாக அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் அபிப்ராயத்தை பெற்ற நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தலைப்புகளில் கருத்துகளை பகிர்ந்தார். அதில் அவர் வழக்கமாக ஒரு சமூகத்தை பின்பற்றும் கதாபாத்திரங்களில் நடித்து வர காரணம் என்ன?என்று கேட்கையில் அவர்,   

“சினிமாவில் கிடைக்கும் கதாபாத்திரதங்களுக்கு அந்த நடிகர் பொறுப்பல்ல.. அது இயக்குனர் எண்ணம்.  வேலா ராமமூர்த்தி இந்த உடம்பு இல்லாம ஒல்லியா சோர்ந்து போய் இருந்திருந்தா என்னை அந்த கதாபாத்திரங்களுக்கு கூப்ட மாட்டார்கள். தோற்றம் பார்த்து தான் கதாபாத்திரங்கள் கொடுக்கிறார்கள்." என்னை பொறுத்தவரை சினிமாவை கலையாக பார்க்க பழகனும். நான் தொழில் னு கூட சொல்ல மாட்டேன். இயக்குனர் அந்த கதாபாத்திரம் கொடுத்தால் நான் அந்த கதாபாத்திரமாக மாற வேண்டும். நான் நடிப்பதெல்லாம் உண்மையிலே இருக்கும் மனிதர்கள்தான். பாயும்புலியில் நல்ல அப்பாவாக நடித்தேன் அந்த படத்தில் நடித்தது குறித்து யாரும் பேசவில்லை. மிரட்டலான தோற்றம் கொண்ட கதாபாத்திரம் தான் மக்கள் கண்ணுக்கு தெரியுது. என் தோற்றத்துக்கு அது பொறுந்தி போகுது போல..” என்றார்.

மேலும் அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முற்போக்கான திரைப்படங்கள் வருவது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்கையில்,

“தமிழில் முற்போக்கான படங்கள் வருகிறதா?..  எந்த படங்களாக இருந்தாலும் சரி.. சாதிய பற்றி பேசுகின்ற படங்கள் எல்லாமே தவறான படங்கள் தான். எந்த சாதியை பற்றி பேசினாலும் அது தவறான படம் தான். அவர் எடுக்கிறார் நானும் எடுக்கிறேன் னு போட்டியா தான் போய்ட்டு இருக்கும். வலியை சொல்கிற படங்களை மக்கள் கொண்டாடுவார்கள். போட்டியாய் வரும் படங்களை மக்கள் நிராகரித்திடுவார்கள். அதனுடைய ஆயுள் மாறுபடும்" என்றார்.

மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த எழுத்தாளர் நடிகர் வேல ராமமூர்த்தியின் முழு நேர்காணல் இதோ..

“ஏன் இவங்கள சமூகம் ஏத்துக்கனும்” காட்டமாக விமர்சித்த நடிகை ஷகீலா..  – வைரலாகி வரும் முழு வீடியோ இதோ..
சினிமா

“ஏன் இவங்கள சமூகம் ஏத்துக்கனும்” காட்டமாக விமர்சித்த நடிகை ஷகீலா.. – வைரலாகி வரும் முழு வீடியோ இதோ..

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தளபதி விஜயின் ‘லியோ’ .. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் தகவல் இதோ..
சினிமா

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தளபதி விஜயின் ‘லியோ’ .. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் தகவல் இதோ..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமலா ஷாஜி.. உற்சாகத்தில் ரசிகர்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..
சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமலா ஷாஜி.. உற்சாகத்தில் ரசிகர்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..