நம் அன்றாட வாழ்க்கையில் நமக்கு துணையாய் இருந்து,பல இன்னல்களை தாண்டி நம் வாழ்க்கையை அழகாக மாற்றுவது பெண்கள் தான்.தாயாக,மனைவியாக,நண்பராக,உடன்பிறப்பாக பல பரிமாற்றங்களில் வந்து நமக்கு பெரும் உதவியாய் இருக்கும் இறைவிகள் இவர்கள்.

ஆணுக்கு பெண் சளைத்தவளில்லை என்று மூச்சிற்கு முன்னூறு முறை வசனம் பேசினாலும், செயல்பாட்டில் சரிசமமாய் பார்த்தல் முழுமையடையவில்லை.பெண் என்பவள் வெறும் வீட்டுவேலை செய்துகொண்டு இருப்பவள் அல்ல என்று பல பெண்களும் இன்றைய காலகட்டத்தில் அழுத்தமாக நமக்கு புரியவைத்து விட்டனர்.

அத்தகைய பெண்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டு தோறும் உலக மகளிர் தினம் மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும்.இந்த முறை இந்த கொண்டாட்டத்தில் மேலும் ஒரு உற்சாகமாக கலாட்டா சார்பாக ஒரு வாக்கெடுப்பை நடத்தி வருகிறோம்.

திரைத்துறையில் பல பெண்கள் அசத்தி நம் மனதில் இடம்பிடித்துள்ளனர்,ஆனால் அதனை தாண்டி வீட்டில் உள்ள பெண்களை மகிழ்விக்கும் சீரியல் பெண் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.தற்போது சின்னத்திரையில் அசத்தி வரும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இந்த வாக்கெடுப்பில் உள்ளனர்.

Favorite Heroine,Favorite Second Lead,Favorite Mother,Favorite Villain,Favorite Wife,Favorite Mother-in-law,Favorite Senior Villain,favorite Supporting Character உள்ளிட்ட பல பிரிவுகளில் வாக்கெடுப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதில் தங்கள் மனம் நட்சத்திரங்களுக்கு ஓட்டளித்து அவர்களை வெற்றிவாகை சூடவைக்க ரசிகர்கள் ஆவலாக வாக்களித்து வருகின்றனர்.இந்த வாக்கெடுப்பில் உங்கள் வாக்குகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் வாக்குகளை பதிவு செய்யலாம்.

 FAVOURITE TELEVISION CELEBRITY FOR WOMEN'S DAY