தென்னிந்தியாவின் முன்னணி செய்தி மற்றும் பத்திரிகை நிறுவனமாக வருவது நமது கலாட்டா நிறுவனம்.20 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களுக்கு தரமான நம்பத்தக்க அரசியல்,சினிமா,விளையாட்டு என பல செய்திகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறோம்.இணையத்தளம்,யூடியூப் என எங்களை தொடர்ந்து ரசிகர்களும் பாராட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

செய்திகளை தாண்டி பல துறைகளில் இருக்கும் பல சாதனையாளர்களை கலாட்டா கௌரவிக்க ஒருபோதும் தவறியதில்லை.அப்படி பல துறைகளில் சாதிக்கும் பலருக்கும் விருதுகள் வழங்கி கலாட்டா சிறப்பித்துள்ளது..சில மாதங்களுக்கு முன் இதுவரை தென்னிந்திய அளவில் எந்த ஒரு இணையதளமும் நடத்தாத அளவு பிரம்மாண்ட விழாவாக The Galatta Crown 2022 விருது விழாவை நடத்தி அசத்தினோம்.

இதனை தவிர Wonder woman,தொலைக்காட்சி விருதுகள் என பல விருதுகளை அளித்து பல பிரபலங்களையும்,நட்சத்திரங்களையும் கௌரவித்துள்ளோம்.அந்த வரிசையில் அடுத்ததாக டிஜிட்டல் யுகத்தில் கலக்கும் பலரையும் கௌரவிக்கும் படி கலாட்டா டிஜிட்டல் ஸ்டார்ஸ் 2022 என்ற விருது நிகழ்ச்சியை நடத்தவுள்ளோம்.

பல துறைகளில் யூடியூப்பில் பட்டையை கிளப்பி வரும் பல நட்சத்திரங்கள் விருது வெல்லும் போட்டியில் நாமினேட் ஆகியுள்ளனர்.இந்த கலாட்டா டிஜிட்டல் ஸ்டார்ஸ் 2022ற்கான வாக்களிப்பு தற்போது துவங்கியுள்ளது.உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரத்தை/பிரபலத்தை ஜெயிக்க வைக்க அவர்களுக்கு உங்கள் வாக்கினை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்து உங்கள் ஆதரவை கொடுக்கலாம்

Vote For Your Favorite YouTube Tamil Celebrity 2022 Galatta Digital Stars Award