கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். 

VJramya

இந்நிலையில் VJ ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கடைசியாக கூடைப்பந்து கொண்டு உடற்பயிற்சி செய்தார் ரம்யா. வீட்டில் இருந்து உடற்பயிற்சி செய்வோருக்கு ரம்யாவின் இந்த டெய்லி டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

VJRamya

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் ரம்யா. சிறந்த நிகழ்ச்சித்தொகுப்பாளராக இருந்த ரம்யா, நடிப்பிலும் தன்னை செதுக்கிக்கொள்கிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Today’s good mood is sponsored by Yoga 🧘‍♀️🤫. . #SelfQuarantine #BodyAndMind #AsanasToFlow #OneNeedsPeace

A post shared by Ramya Subramanian (@ramyasub) on