சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் ரம்யா சுப்ரமணியன்.விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளியினான இவர் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் சங்கத்தலைவன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஓகே கண்மணி,கேம் ஓவர்,ஆடை உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.மேலும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கொரோனா காரணமாக அவ்வப்போது தனது ரசிகர்களுடன் லைவ்வில் பேசியும்,அவர்களுக்கு உடற்பயிற்சி குறித்தும் இவர் தனது சமூகவலைத்தளங்களில் பதிவு செய்வார்.அவ்வப்போது டிக்டாக் செய்தும் தனது
திறமையை வெளிப்படுத்தி வந்தார் ரம்யா.

இவரது டிக்டாக் விடீயோக்களும்,இன்ஸ்டாகிராம் போஸ்டுகளும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன.இவர் போடும் விடீயோக்கள் இணையத்தில் ட்ரெண்ட் அடித்து வருகின்றன.தற்போது தனது டிக்டாக் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ரம்யா.

டிக்டாக்கில் பிரபலமாக உள்ள ட்ரெஸுக்கேத்த பாட்டு என்ற சேலஞ்சை ஏற்ற ரம்யா.வித்தியாசமான கெட்டப்களில் வித்தியாசமான பாடல்களுடன் வீடீயோவை பதிவிட்டுள்ளார்.முதலில் சேலை கட்டி வந்தவர் சேலையில் வீடுகட்டவா என்று அஜித் பாடலில் ஆரம்பித்து,மாடர்ன் ட்ரெஸ்ஸில் கூகுள் கூகுள் என்று விஜயின் பாடலுக்கு நடனமாடி அடுத்து சுடிதார் அணிந்தும்,ஒர்கவுட் செய்யும் உடையணித்தும் சில பாடல்களுக்கு டிக்டாக் செய்துள்ளார் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

@iramyasub

##dressforthesongchallenge @myprotein

♬ original sound - iramyasub