சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் ரம்யா சுப்ரமணியன்.விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளியினான இவர் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் சங்கத்தலைவன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஓகே கண்மணி,கேம் ஓவர்,ஆடை உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.கடைசியாக கடந்த 2021 பொங்கலுக்கு வெளியாகி வெற்றிநடைபோட்ட தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் ரம்யா.

தொடர்ந்து நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்காமல் இருந்தாலும் அவ்வப்போது சிறப்பு நிகழ்ச்சிகள்,ஆடியோ லான்ச்கள் என்று அவ்வப்போது தொகுத்து வழங்கியும் வந்தார்.உடற்பயிற்சியில் பெரிதும் ஆர்வம் கொண்டவரான ரம்யா அவ்வப்போது ரசிகர்களுக்கு டிப்ஸ் வழங்கி வருவார்.சில மாதங்களுக்கு முன் உடலெடையை குறைத்து அசத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ரம்யா தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார் ரம்யா.தற்போது தனது ட்ரான்ஸ்பர்மேஷன் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்