கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். 

VJRamya

இந்நிலையில் VJ ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிக்கொண்டே வீட்டை சுத்தம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தை தெறிக்க விடுகிறது. 

VJ Ramya

கையில் துடைப்பத்துடன் வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடுகிறார் ரம்யா. மகிழ்ச்சியான முகத்துடன் அவரது அம்மா இந்த வீடியோவை எடுத்ததாகவும், அவருக்காக இதுமாதிரி எத்தனை முறை வேண்டுமென்றாலும் செய்வேன் எனவும் கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் ரம்யா.