நாற்காலி வைத்து உடற்பயிற்சி செய்யும் VJ ரம்யா !
By Sakthi Priyan | Galatta | April 21, 2020 13:05 PM IST

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் VJ ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாற்காலி கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஜிம்முக்கு செல்ல இயலாமல், வீட்டில் இருந்து உடற்பயிற்சி செய்வோருக்கு ரம்யாவின் இந்த டெய்லி டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றே கூறலாம்.
XB பிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் ரம்யா. லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். சிறந்த நிகழ்ச்சித்தொகுப்பாளராக இருந்த ரம்யா, நடிப்பிலும் தன்னை செதுக்கிக்கொள்கிறார்.
Director Venkat Prabhu praises Harish Kalyan - Vivekh starrer Dharala Prabhu
21/04/2020 01:44 PM
Karthi condemns public's inhumane act in preventing burial of Dr Simon Hercules
21/04/2020 01:17 PM
Chiranjeevi announces his next three films - talented directors onboard!
21/04/2020 12:15 PM