ரசிகர்களை ஈர்த்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர் பூஜா. நண்பன், காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து நடிப்பிலும் அசத்தினார் பூஜா ராமச்சந்திரன். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு நடிகர் ஜான் குக்கேன் என்பவரை திருமணம் செய்தார். 

pooja ramachandran

இவர்களது திருமணம் நடந்து ஒரு வருடம் நிறைவு செய்துள்ள நிலையில் ஜான் கொக்கேன் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், உன்னுடன் 1 வருட லாக்டவுன் கொண்டாட்டம். திருமண நாள் வாழ்த்துகள் பூஜா என்று வாழ்த்து தெரிவித்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

pooja

தமிழ் மொழி படங்கள் தவிர்த்து தெலுங்கிலும் பிஸியாக இருக்கிறார் பூஜா. கடைசியாக வெங்கடேஷ் நடித்த வெங்கி மாமா படத்திலும் எந்தா மன்சிவாடவுறா படத்திலும் நடித்திருந்தார். அட்லீ தயாரிப்பில் அந்தகாரம் படத்திலும் நடித்துள்ளார்.