தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தவர் VJ மணிமேகலை. காமெடி கலந்த பேச்சால் அதிக ரசிகர்களை ஈர்த்தவர். தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பல ரசிகர்களை கவர்ந்தார் மணிமேகலை.

VJ Manimegalai Imitates Vadivelu In Tiktok Video

ஊரடங்கின் போது கிராமத்தில் பொழுதை கழிக்கும் மணிமேகலை தனது கணவருடன் காமெடியான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். ஊரில் உள்ளவர்களுக்கு நடனம் கற்றுத்தருவது, சமைப்பது, விளையாடுவது என அட்டகாசம் செய்து வருகிறார். இவரது பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

VJ Manimegalai Imitates Vadivelu In Tiktok Video

இந்நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். வட்டி கேட்டு மிரட்டும் வடிவேலுவின் காமெடி காட்சிக்கு, அவர் டிக்டாக் செய்து, அதை பதிவிட்டிருக்கிறார். இந்த டிக்டாக் வீடியோ இணையதள வாசிகளை கவர்ந்துள்ளது. மேலும் டெரர் மணிமேகலை என பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Terror Manimegalai 💪😏 Be careless ☝️😛

A post shared by Mani Megalai (@iammanimegalai) on