தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் மஹேஸ்வரி.சன் ம்யூஸிக்கில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான தாயுமானவன் தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமானார் மஹேஸ்வரி.இந்த தொடரின் மூலம் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.இதனை தொடர்ந்து புது கவிதை சீரியலில் ஹீரோயினாக அசத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருந்தார் மஹேஸ்வரி.திருமணத்திற்கு பிறகு ஒரு பிரேக் எடுத்துக்கொண்டார் மஹேஸ்வரி.

இதனை அடுத்து ஜீ தமிழில் தொகுப்பாளராக மாறிய மஹேஸ்வரி பல சூப்பர்ஹிட் ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தார்.குயில்,மந்திர புன்னகை,சென்னை 28 2 உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் மஹேஸ்வரி.கடைசியாக இவர் நடித்திருந்த சென்னை 28 படத்தில் இவரது கேரக்டருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும்  தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.பலரும் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,தங்களுக்கு இருக்கும் திறமைகளை காட்டுவது,போட்டோஷூட்கள் நடத்துவது,ஒர்க்கவுட் செய்வது என்று பல வகையில் நேரத்தை கழித்து வந்தனர்.மஹேஸ்வரியும் தன் பங்கிற்கு இந்த லாக்டவுன் நேரத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.தற்போது அவர் ஒரு போட்டோஷூட்டின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.அதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்