தனது படங்கள் மூலம் தமிழ்சினிமாவை உலக தரத்திற்கு எடுத்துச்செல்லும் கலைஞன் உலகநாயகன் கமல்ஹாசன்.இவர் அடுத்ததாக இளம் வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் அறிவிப்பின் முதலே படத்தின் மீதுள்ள எடிதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது அடுத்ததாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது , இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடிக்கின்றனர் என்றதும் மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம்,நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்தது.தற்போது இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது ஷிவானியை தவிர பிரபல நடிகையும் தொகுப்பாளியுமான VJ மஹேஸ்வரி மற்றும் மைனா நந்தினி இருவரும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இருவரும் சின்னத்திரையில் நட்சத்திரங்களாக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளனர்.மஹேஸ்வரி மந்திர புன்னகை , சென்னை 28 2 உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.மைனா நந்தினி கேடி பில்லா கில்லாடி ரங்கா,நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

இதுவரை சின்ன சின்ன முக்கிய வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்து வந்த மஹேஸ்வரி மற்றும் மைனா நந்தினி இருவரும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தங்கள் சினிமா வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளனர்.இவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.