தமிழ்  தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் அஞ்சனா.சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.இதனை தொடர்ந்து புதுயுகம் மற்றும் ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக வேலை பார்த்தார்.

டிவிகளில் மட்டுமல்லாமல் பல இசை வெளியீட்டு விழா மற்றும் பட விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.தனது பேச்சுதிறமையால் பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் அஞ்சனா.ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் தொடரை தொகுத்து வழங்கி வந்தார் அஞ்சனா.இதனை தொடர்ந்து தீபக்குடன் இணைந்து இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் அஞ்சனா.

கொரோனவை அடுத்து சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வந்தார் அஞ்சனா என்றாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் குறையாமலேயே இருந்தது.சமூகவலைத்தளங்களில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் அஞ்சனா புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

சமீபத்தில் முடிந்த புஷ்பா படத்தின் வெற்றி விழாவை தொகுத்து வழங்கி அசத்தினார் அஞ்சனா.இதுகுறித்த புகைப்படங்களை அவர் ட்விட்டரில் பகிர்ந்தபோது , நெட்டிசன் ஒருவர் உங்களை காதலிக்கிறேன் திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்க அதற்கு அஞ்சனா கேஷுவலாக தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதை தெரிவித்தார்.அதற்கு அந்த நெட்டிசன் நீங்கள் ரிப்ளை செய்யமாட்டீர்கள் என்று ட்வீட் செய்தேன் என்று சமாளித்தார்.அந்த நெட்டிசனுக்கு அஞ்சனா கொடுத்த பதில் வைரலாகி வருகிறது

vj anjana rangan trending reply to fan online marriage proposal