தமிழின் பிரபல மியூசிக் சேனல்களில் ஒன்று சன் டிவி நிறுவனத்தின் சன் மியூசிக்.தமிழின் பிரபல மியூசிக் சேனலான இந்த சேனலுக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.இந்த சேனலில் வேலை செய்த பலரும் மக்கள் மனதில் இடம்பிடித்து தங்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தனர்.பாடல்கள் மட்டுமின்றி வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் சன் மியூசிக் மிகவும் பிரபலமானது.

அஞ்சனா,மணிமேகலை,தியா,சங்கீதா,ரியோ,சுரேஷ் என்று சின்னத்திரையில் ஜொலித்து வரும் பலரும் இந்த சேனலில் ஒரு பெரிய பங்காற்றியுள்ளனர்.கடந்த சில வருடங்களாக சன் மியூசிக்கை கலக்கி வந்த ஒருவர் VJ அக்ஷயா.தனது பேச்சாலும்,அழகாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை இவர் வெகு விரைவில் கைப்பற்றினார்.

இவருக்கென்று பல ரசிகர் பக்கங்கள்,போட்டோ வீடியோ எடிட்கள் என்று ரசிகர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.ஹிட்லிஸ்ட்,செம மார்னிங்,நோ ப்ராப்லம் உள்ளிட்ட சூப்பர்ஹிட் ஷோக்களை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.சன் டிவியின் வணக்கம் தமிழா தொடரையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.இவரது திருமணம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகப்பெரிய ஹிட் தொடர்களில் ஒன்று ரோஜா,இந்த தொடரில் நடித்து வந்த ஷாமிலி சில வாரங்களுக்கு முன் கர்பமாக இருப்பதால் தொடரில் இருந்து விலகினார்.தற்போது இந்த தொடரில் ஷாமிலிக்கு பதிலாக VJ அக்ஷயா இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது,இவரது எபிசோடுகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

A post shared by Tamil TV News (@tamiltvnews)