உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சைக்கோ. மிஸ்கின் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் பார்வையற்றவராக நடித்து அசத்தியுள்ளார் உதயநிதி. 

udhayanidhi

இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது. படத்தை டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்தது. இதில் இயக்குனர் ராம், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். 

udhayanidhi

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் உன்ன நெனச்சு நெனச்சு பாடல் மிகவும் பிரபலமானது. கபிலனின் வரிகளில் அமைந்த இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். தற்போது இந்த பாடலை நடிகர் செல் முருகன் பாடிக்கொண்டு வருகையில், சின்ன கலைவானர் விவேக், பல்பு நிஜத்திலேயே ஷாக் அடிக்கிறது, பல காதல் இப்பிடித்தான் ஷாக்ல முடியுது என்று பதிவு செய்துள்ளார்.