அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். மேகா ஆகாஷ் மற்றும் கன்னிகா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இயக்குனர் மகிழ்திருமேனி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

vijay sethupathi

பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தனது உதவியாளர் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தை எஸ்.பி ஜனநாதன் க்ளாப் அடித்து படப்பிடிப்பை பழனியில் துவங்கி வைத்தார்.

yaadhumooreyyaavarumkelir

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். பழனி மற்றும் ஊட்டி போன்ற சில பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து ஆர்ட் டைரக்டர் வீரசமர் உருவாக்கிய 150 அடி சர்ச் கொண்ட செட்டில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக நெருங்கிய திரை வட்டாரம் மூலம் சமீபத்தில் தகவல் வெளியானது.

vivek

தற்போது சின்ன கலைவானர் விவேக் படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் தெரியவந்தது.