கடந்த 2007ம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான திரைப்படம் சிவாஜி. ரஜினி, ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன், சுமன் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இந்த திரைப்படம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. சூப்பர்ஸ்டாரின் ஸ்டைல் ஒருபுறம் சுஜாதா எழுதிய வசனங்கள் மறுபுறம் என பட்டையை கிளப்பியது இப்படம்.

Vivek As Anniyan In Sivaji Deleted Scenes

இந்நிலையில் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சியை பகிர்ந்துள்ளார். அந்நியன் படத்தில் வரும் காட்சியை மீண்டும் உருவாக்கியுள்ளார் நடிகர் விவேக். அந்நியனாகவும், அம்பியாகவும் மாறி மாறி நடித்திருக்கிறார். இவருடன் இந்த காட்சியில் போஸ் வெங்கட் நடித்துள்ளார். 

Vivek As Anniyan In Sivaji Deleted Scenes

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ், அந்நியன், சிவாஜி, இந்தியன் 2 போன்ற படங்களில் விவேக் நடித்துள்ளார். இதுதவிர்த்து யாதும் ஊரே யாவரும் கேளிர், அரண்மனை 3 போன்ற படங்கள் உள்ளது.