சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள். இப்படத்தின் முதல் பாடலான அடிச்சு தூக்கு கலக்கி வரும் நிலையில், விஸ்வாசம் படம் பற்றிய அடுத்த செய்தி ஒன்று வெளியாகியது.

சமீபத்தில் விஸ்வாசம் படத்தின் வேட்டி கட்டு பாடல் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல பாடகர் ஷங்கர் மஹாதேவன் இப்பாடலை பாடியுள்ளார். தற்போது இதுகுறித்து வீடியோ பதிவை வெளியிட்டார்.

அதில் அவர் கூறுகையில், தல அஜித்திற்கு பாடியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும், இப்பாடல் அமைய காரணமாய் இருந்த இசையமைப்பாளர் இமானுக்கு நன்றியை கூறினார்.