கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை என்று ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு காடன், எஃப்.ஐ.ஆர் போன்ற படங்களால் விருந்தளிக்கவுள்ளார். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் விஷ்ணு விஷால் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். 

Vishnu Vishal

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ராட்சசன் படம் குறித்து பதிவு செய்துள்ளார். படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்தாலும், தொலைக்காட்சியில் ராட்சசன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள் ரசிகர்கள். வாழ்த்திய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. இந்த உத்வேகம் என்னை பெரிய இடங்களுக்கு கூட்டிச்செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். 

VishnuVishal

சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்க, விஷ்ணு விஷால் தயாரிக்கவிருக்கிறார். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார்.