கடந்த 2015-ம் ஆண்டு ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் இன்று நேற்று நாளை. விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் ஆகியோரின் நடித்திருந்தனர். இதன் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் இன்று நேற்று நாளை படத்தின் 2-வது பாகத்தை தயாரிப்பதாக திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

indrunetrunaalai

இந்த இரண்டாவது பாகத்தை ரவிக்குமாரின் உதவி இயக்குனரான கார்த்திக் இயக்குவார் என்றும், நடிகர்கள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் செய்தி வெளியானது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

VishnuVishal

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து இந்த படம் குறித்து அப்டேட் கேட்ட ரசிகரிடம், இந்த படத்தின் எழுத்துப் பணிகள் ஓரளவுக்கு முடிந்து விட்டது. ஊரடங்கு நிறைவு பெற்றதும் இந்த படத்தின் முதற்கட்டப்பணிகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.