ஜுவாலா கட்டாவுடனான முதல் சந்திப்பு ! விஷ்ணு விஷால் பதிவு
By Sakthi Priyan | Galatta | May 06, 2020 09:50 AM IST

தமிழ் திரையுலகில் ஹேட்டர்ஸ் இல்லாத ஹீரோக்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் காடன், எஃப்.ஐ.ஆர் போன்ற படங்கள் தயார் நிலையில் உள்ளது. ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் விஷ்ணு விஷால் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஜுவாலா கட்டாவுடனான முதல் சந்திப்பு குறித்து விஷ்ணு இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அவர்களின் முதல் சந்திப்பு பற்றி கேட்டதற்கு, நடிகர் விஷாலின் சகோதரிக்கு திருமண சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தான் ஜுவாலா கட்டாவை முதல் முறை சந்தித்தேன் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்க, விஷ்ணு விஷால் தயாரிக்கவிருக்கிறார். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார்.