தமிழ் திரையுலகில் வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை என்று ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு காடன், எஃப்.ஐ.ஆர் போன்ற படங்களால் விருந்தளிக்கவுள்ளார் விஷ்ணு. 

vishnuvishal

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வு பதிவுகள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால், எஃப்.ஐ.ஆர் படத்தின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை தெறிக்க விடுகிறது. 

FIR

அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கிய இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அஷ்வந்த் இசையமைக்கிறார்.