தமிழ் திரையுலகில் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். விஷ்ணு விஷால் தன்னுடன் கல்லூரியில் படித்த ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார். இந்த விஷயம் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. 

இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கணையான ஜூவாலா கட்டாவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஒன்றாக இருந்த போட்டோக்கள் வெளியாகி வைரலானது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜூவாலா கட்டாவின் பிறந்த நாளில் இருவரும் மோதிரம் மாற்றி தங்களின் நிச்சயதார்த்தை முடித்துக் கொண்டனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் விஷ்ணு விஷால் மாலத்திவில் விடுமுறையை கொண்டாடி வருவதாக சில போட்டோக்களை ஷேர் செய்தார். 

அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் தனியாகவா சென்றிருக்கிறீர்கள்? உங்கள் காதலி வரவில்லையா என்று கேட்டிருந்தனர். இந்நிலையில் தனது காதலி தன்னுடன்தான் மாலத்ததீவில் இருக்கிறார் என்று கூறும் வகையில் ஜூவாலா கட்டாவுடன் எடுத்த செல்பி ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் விஷ்ணு விஷால்.

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய அஷ்வந்தின் இசையமைத்துள்ளார். 

இந்த படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் காடன். ராணா முதன்மை கேரக்டரில் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது. காடன் திரைப்படம் மார்ச் மாதம் 26-ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

விஷ்ணு விஷால் தற்போது இன்று நேற்று நாளை 2 மற்றும் மோகன் தாஸ் போன்ற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.