கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் பிரித்விராஜ். அதன் பின் பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்து அவருக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். நடிப்பது அல்லாது இயக்கத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் சூப்பர் ஹிட்டானது. 

Prithviraj

இந்நிலையில் இந்த படத்தை பாராட்டி விஷ்ணு விஷால் பதிவு செய்துள்ளார். தரமான ஸ்கிரிப்ட்டாக இருந்தது. நீங்கள் எங்கிருந்தாலும் திரும்பி வருவீர்கள் என்பது உறுதி. ரசிகராகவும், நலம் விரும்பியாகவும் இதை பதிவு செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

Vishnuvishal

ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் விஷ்ணு விஷால் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்க, விஷ்ணு விஷால் தயாரிக்கவிருக்கிறார். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார்.