FIR திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் வெளிவர உள்ள மோகன் தாஸ் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் கட்டா குஸ்தி.

பாரம்பரியமான கட்டா குஸ்தி சண்டையை மையப்படுத்தி இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் தமிழில் கட்டா குஸ்தி & தெலுங்கில் மட்டி குஸ்தி என இரு மொழிகளில் தயாராகும் இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க, நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்கிறார். 

தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் RT டீம் வொர்க்ஸ் மற்றும் விஷ்ணு விஷாலின் விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார். வெண்ணிலா கபடி குழு & ஜீவா வரிசையில் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி படமும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட கட்டா குஸ்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகவும் தற்சமயம் கேரளாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இந்த ஆண்டில் (2022) வெகுவிரைவில் கட்டா குஸ்தி திரைப்படம் ரிலீஸ் ஆகும் எனவும் விஷ்ணு விஷால் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்டா குஸ்தி பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தை வெளியிட்டு இதனை விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ…
 

#GattaKusthi (tamil)#MattiKusthi (telugu)

80 prcnt shoot complete..
Shoot going on in kerala now..
2022 release...

Vishnu Vishal
The producer@RTTeamWorks@VVStudioz@teamaimpr @UrsVamsiShekar pic.twitter.com/EYNlSckT1o

— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) July 28, 2022