தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக, மீண்டும் ராட்சஷன் திரைப்படத்திற்குப் பிறகு அடுத்த சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக வெளிவருகிறது மோகன்தாஸ். இயக்குனர் முரளி கார்த்திக் எழுதி இயக்கியுள்ள மோகன்தாஸ்  படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க,  பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மோகன்தாஸ் திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார். முன்னதாக விஷ்ணு விஷால் தயாரிப்பில் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள திரைப்படம் F.I.R .

F.I.R படத்தில் விஷ்ணு விஷால் உடன் ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன் மற்றும் ரைசா வில்சன் ஆகியோருடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில் அஷ்வத் இசையமைத்துள்ள F.I.R படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை விஷ்ணுவிஷால் இன்று அறிவித்தார்.

சில தினங்களாக சமூக வலைதளங்களில் F.I.R திரைப்படம் OTT-யில் வெளியாகும் என செய்திகள் பரவி வந்த நிலையில், விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “F.I.R திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியாகும் என்பது தவறான செய்தி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும்… நான் எப்போதும் சொல்வது போல தயாரிப்பாளராகவும் நடிகராகவும் F.I.R படத்தை திரையரங்குகளில் வெளியிட என்னால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறேன்... திரையரங்குகளில் ரசித்து காண்பதற்காகவே இப்படத்தை தயாரித்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.