அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் எஃப்.ஐ.ஆர். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். 

vishnuvishal

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை சுஜாதா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது, விஷ்ணு விஷாலே இந்த படத்தை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இதன் டீஸர் வெளியாகி அசத்தியது. 

vishnuvishal FIR

தற்போது படத்தின் மெலடி பாடல் குறித்த தகவல் வெளியானது. அபே ஜோத்பூர் பாடிய இந்த பாடலின் பெயர் பயணம் என்று தெரிய வந்தது. விஷ்ணு விஷால் நடித்த ஜீவா படத்தில் இடம்பெற்ற ஒருத்தி மேல பாடலை பாடியதும் இவர் தான் என்பது கூடுதல் தகவல்.