கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். இருப்பினும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கணிசமாக உயர்ந்து வருகிறது. 

Vishnuvishal

படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வு பதிவுகள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவுதலை ஒப்பிட்டு புள்ளிவிவரம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவுவது போல் இருக்கிறது. 

VishnuVishal

இதனையடுத்து அப்பதிவில் மெதுவாக கட்டுப்பாட்டை இழந்து வருகிறது. இந்திய மக்கள் தயவுசெய்து நிலமையின் தீவிரத்தை புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். நடிகர் விஷ்ணு விஷால் கூறுவது நியாயம் தானே... எந்த நோயும் அண்டாமல் பார்த்துக்கொள்வது நம்மிடம் தானே உள்ளது. நம் கட்டுப்பாட்டுடன் வீட்டிலேயே இருந்தால் நமக்கு தானே நன்மை.