மகனை காண ஆவலுடன் காத்திருக்கும் விஷ்ணு விஷால் !
By Sakthi Priyan | Galatta | May 07, 2020 14:15 PM IST

விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கவிருக்கும் படம் மோகன்தாஸ். படத்தின் டைட்டில் அறிவிப்பு டீஸர் சமீபத்தில் வெளியாகியது. இந்த படத்தை முரளி கார்த்திக் எழுதி இயக்கவுள்ளார். படத்திற்கு விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்ய, சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரைக்கும் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மகன் ஆர்யன் குறித்து பதிவு செய்துள்ளார். க்யூட்டி.. எப்போது உன்னை பார்க்க போகிறேன் என்று பதிவு செய்துள்ளார். இதன் கீழ் அவரது ரசிகர்கள் ஆறுதலாக கமெண்ட் செய்து வருகின்றனர். விஷ்ணு கைவசம் காடன், FIR போன்ற படங்களும் தயார் நிலையில் உள்ளது.